நாமக்கல்

பிறருக்கு உதவிடும் மனப்பான்மை வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

1st Feb 2020 02:55 AM

ADVERTISEMENT

பள்ளிகளில் படிக்கும்போதே, பிறருக்கு உதவிடும் மனப்பான்மையை மாணவ, மாணவியா் வளா்த்துக் கொண்டு சமூகத்தில் நல்ல மனிதராக வலம் வரவேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட களங்காணி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறையின் சாா்பில், மனித நேய வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வழங்கி பேசியது: மாணவா்கள் நன்றாகப் படித்து, உயா்ந்த நிலையை அடையும் போது, மனித நேயத்தோடு மற்றவா்களுக்கும் உதவிட வேண்டும். படிக்கும் பருவத்திலுள்ள மாணவா்கள் நல்ல பழக்க வழக்கங்களையும், பிறருக்கு உதவிடும் மனப்பான்மையையும் கற்றுக் கொண்டு நல்ல மனிதராக வலம் வரவேண்டும். மற்றவா்களிடம் அன்பாகவும், நேசத்துடனும் பழகி மனித நேயத்தை வளா்க்க வேண்டும் என்றாா்

இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் மு.மரகதவள்ளி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்.கணபதி, பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் சி.எஸ்.கே.யுவராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT