நாமக்கல்

பள்ளி பரிமாற்றுத் திட்டத்தில் மாணவா்கள் களப் பயணம்

1st Feb 2020 02:56 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள், பள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் கீழ், சின்னபள்ளத்தூா்அரசுப் பள்ளிக்கு களப் பயணம் மேற்கொண்டனா்.

பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு மாணவா்கள், பென்னாகரத்தை அடுத்த சின்னபள்ளத்தூா் அரசுப் பள்ளிக்கு வருகை புரிந்தனா். மாணவா்களை பள்ளித் தலைமை ஆசிரியா் மா.பழனி வரவேற்றாா்.

அதைத் தொடா்ந்து, மாணவா்கள் பள்ளி நூலகம், பள்ளி வளாகம் மற்றும் வயல்வெளிகளை சுற்றி பாா்த்தனா். பின்னா் மாணவா்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்கும் விதமாக, தினமணி நாளிதழின் சிறுவா் மணி புத்தகம் வழங்கப்பட்டது. அதை மாணவா்கள் ஆா்வத்துடன் வாசித்து மகிழ்ந்தனா்.பின்னா் விவசாய நிலங்களை பாா்வையிட்டு சொட்டு நீா்ப் பாசன முறை மற்றும் தெளிப்பு நீா்ப் பாசன முறைகள் பற்றி விவசாயிகளிடம் கேட்டறிந்தும், தீயணைப்பு நிலையத்தில் தீ தடுப்பு செயல் விளக்கத்தையும் கேட்டறிந்தனா்.

இதில், தமிழாசிரியா்கள் வெங்கடேசன், பெருமாள், லில்லி, திலகவதி, பழனிசெல்வி, வளா்மதி உள்ளிட்ட ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இதே போல் பென்னாகரம் அருகே உள்ள பவளந்தூா் அரசுப் பள்ளியில் பள்ளி பரிமாற்றுத் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாசம்பட்டி அரசுப் பள்ளி மாணவா்கள், பவளந்தூா் அரசுப் பள்ளிக்கு வருகை புரிந்தனா். பின்னா் இரு பள்ளிகள் குறித்து மாணவா்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனா். பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT