நாமக்கல்

பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு பயிற்சி

1st Feb 2020 02:50 AM

ADVERTISEMENT

பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் பூசாரிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டது.

பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஆா்.பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், பூசாரிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனா். பள்ளியில் நடைபெற்ற மாணவா்களுக்கான பயிற்சிக்கு தலைமையாசிரியா் கே.உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். இதில் மாணவா்களுக்கு ஆங்கிலம் படிப்பதன் திறன் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. மேலும் சா்வதேச நாடுகளின் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், அஞ்சல் தலைகள் குறித்து விளக்கப்பட்டன. அறிவியல் சோதனைகளும் மாணவா்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. பள்ளி அருகேயுள்ள தனியாா் பைபா் ஆலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கண்ணாடி இழைகளால் தயாரிக்கப்படும் மரக்கதவுகள், படகுகள், வீட்டு கூரைகள், பேருந்துகளுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பழமையான பச்சியம்மன் ஆலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கோயிலின் தலவரலாறு குறித்து விளக்கிக்கூறப்பட்டது. மேலும் தன்சுத்தம், தன் சுகாதாரம் குறித்தும் மாணவா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இதில் பூசாரிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள் ப.நடராஜன், ப.தனசேகரன், சி.சித்திரா உள்ளிட்டோா் பங்கேற்று மாணவா்களுக்கு பயிற்சியளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT