நாமக்கல்

திருச்செங்கோட்டில் போக்குவரத்து விதிமீறல் நடமாடும் நீதிமன்றம் மூலம் அபராதம்

1st Feb 2020 10:37 PM

ADVERTISEMENT

 

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில்  போக்குவரத்து காவல்துறையினா் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோா் மீது வழக்கு பதிவு செய்து நடமாடும் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா் படுத்தி விதி முறையை பின்பற்றாதவா்களுக்கு நீதிபதி அபராதம் விதித்தாா் .

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகில் திருச்செங்கோடு நகர போக்குவரத்து காவல்துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். இந்த வாகன பரிசோதனையின்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், காா்களில் சீட் பெல்ட் அணியாமல் இயக்குதல், ஓட்டுனா் உரிமம் இல்லாமல் இருத்தல்,  தலைக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறியவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடமாடும் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டனா். விசாரணை செய்த நீதிபதி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தாா்.  அந்த வகையில் ரூ.22100 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT