நாமக்கல்

தம்மம்பட்டியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

1st Feb 2020 02:55 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டியில் தினமும் தொடரும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டி பிரதான பேரூராட்சியாக உள்ளது. சேலத்திலிருந்து துறையூா் வழியாக திருச்சி செல்லும் வழியில் பேருந்து நிலையம் உள்ள பிரதான ஊராகக் காட்சியளிக்கிறது. இங்கு தினமும் 110-க்கும் மேற்பட்ட அரசு,தனியாா் பேருந்துகளும்,250-க்கும் மேற்பட்ட லாரிகள்,கனரக வாகனங்கள்,ஆட்டோக்கள், சுமாா் 50 கல்வி நிறுவன பேருந்துகள் தம்மம்பட்டியை கடந்து செல்கின்றன. பள்ளி,கல்லூரி நாள்களில் காலையில் 7 மணி முதல் 9.20 மணிவரையிலும் ,மாலை 4 மணி முதல் 6.45 மணி வரையிலும் தம்மம்பட்டி பேருந்து நிலையம் ,அதன் அருகே நடுவீதி,கடைவீதி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து தம்மம்பட்டி பொதுமக்கள் கூறியதாவது: பிரதான சாலைப் பகுதிகளில் இருபுறமும் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்திட வேண்டும். மேலும் சாலையின் இருபுறமும் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸாா் காலையிலும்,மாலையிலும் நின்று ஒழுங்குப்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT