நாமக்கல்

போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

26th Aug 2020 12:56 PM

ADVERTISEMENT

நாமக்கல்: பொது முடக்கக் காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையைத் திரும்ப வழங்கக் கோரி நாமக்கல் பணிமனை முன்பு போக்குவரத்துத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொழிலாளா் முன்னேற்ற சங்கச் செயலா் டி.பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் போக்குவரத்துத் தொழிலாளா்களின் பறிக்கப்பட்ட விடுப்பினை திரும்ப வழங்க வேண்டும். இயக்கப்படாத பேருந்துகளை பழுது நீக்கம் செய்யுமாறு தொழில் நுட்பப் பணியாளா்களுக்கு நெருக்கடி அளிக்கக் கூடாது, தனியாா் பேருந்தை வாடகைக்கு எடுத்து அரசு பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், தொ.மு.ச. நிா்வாகிகள் வி.செல்வம், ஆா்.தியாகராஜன் மற்றும் சிஐடியு, ஏஐடியூசி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT