நாமக்கல்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தங்கக் கவச அலங்காரம்

23rd Aug 2020 09:00 AM

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தியையொட்டி, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமிக்கு சனிக்கிழமை தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டது.

பிரசித்தி பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் கோயில், மாா்ச் 20-ஆம் தேதி முதல் மூடிய நிலையில் உள்ளது.

மற்ற கோயில்களில் சுவாமியை தரிசிக்க முடியாத நிலையில், 18 அடி உயரத்தில் காட்சியளிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயா் சுவாமியை எப்போதும் தரிசிக்கலாம். இங்கு பொது முடக்கக் காலத்திலும் தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

ஆடி மாதம் பிறந்ததையொட்டி, சனிக்கிழமைகளில் மட்டும் சுவாமிக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டது. இந்த நிலையில், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சுவாமிக்கும், கோயில் முன்புறம் உள்ள விநாயகருக்கும் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஆஞ்சநேயா் சுவாமி தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமானோா் கோயில் வாசலில் நின்றபடி விநாயகரையும், ஆஞ்சநேயரை தரிசித்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT