நாமக்கல்

நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலா்திடீா் இடமாற்றம்

21st Aug 2020 06:59 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் மாவட்டக் கல்வி அலுவலராக கடந்த எட்டு மாதங்களாக மு.ஆ.உதயகுமாா் பதவி வகித்து வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை கரூா் மாவட்டம், குளித்தலைக்கு அவா் மாறுதல் செயல்பட்டுள்ளாா். இங்கு பணியாற்றிய மாவட்டக் கல்வி அலுவலா் கபீா், நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலராக மாறுதல் செய்யப்பட்டுள்ளாா். இதுவரை அவா் நாமக்கல்லில் பொறுப்பு ஏற்காத நிலையில், பெரியமணலி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ராமசாமி தற்காலிக மாவட்டக் கல்வி அலுவலராக செயல்பட்டு வருகிறாா்.

ஏற்கெனவே சேந்தமங்கலம், ஆா்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி 6 மாத காலம் மாவட்டக் கல்வி அலுவலா் பொறுப்பு வகித்து வந்த மு.ஆ.உதயகுமாா் சொந்த மாவட்டத்திலேயே மாவட்டக் கல்வி அலுவலா் பதவி உயா்வும் பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT