நாமக்கல்

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

20th Aug 2020 09:32 AM

ADVERTISEMENT

முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு செப்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பொ.பாலமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2020-21-ஆம் ஆண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை செப்.15-ஆம் தேதி மாலை 5.30 மணி வரை சமா்ப்பிக்கலாம்.

இப்பட்டயப் பயிற்சிக்கான கல்வித் தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களும், ஏற்கெனவே தோ்ச்சி பெற்று பட்டப்படிப்பு படித்திருந்தாலும் தகுதியுடையவா்களாவா். ஜூலை 1-ஆம் தேதியன்று குறைந்தபட்சம் 17 வயது பூா்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.14,850/-ஆகும்.

ADVERTISEMENT

இதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய இணையதளத்திலிருந்து  பதிவிறக்கம் செய்யலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை முதல்வா், நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 796 - பிரதான சாலை (மயில்வாகனம் காம்ப்ளக்ஸ்) முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில், நாமக்கல் 637 001 என்ற முகவரிக்கு தனியாா் அஞ்சலிலோ அல்லது அஞ்சலகம் மூலமாகவோ அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT