நாமக்கல்

காவிரி ஆற்றுப் பாலத்திலிருந்து குதித்து மாற்றுத்திறனாளி தற்கொலை? தீயணைப்புத் துறையினர் தேடல்

11th Aug 2020 01:39 PM

ADVERTISEMENT

காவிரி ஆற்றுப் பாலத்திலிருந்து மாற்றுத்திறனாளி இளைஞர் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டதால் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் காவிரி ஆற்றில் பரிசல் மூலம் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த காவேரி நகர், பூசாரிக் காட்டைச் சேர்ந்தவர் அர்த்தனாரி மகன் லோகநாதன் (37). மாற்றுத் திறனாளி. கைத்தறித் தொழிலில், தினக்கூலி வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்ற நிலையில், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கரோனா தடை உத்தரவால் வேலை வாய்ப்பு இல்லாததால் வருமானம் இன்றி தவித்து வந்தார்.

கடந்த சில நாள்களாக மிகுந்த வேதனையில் காணப்பட்டு வந்த நிலையில், இவரது மூன்று சக்கர வாகனம் குமாரபாளையம் காவிரி ஆற்றின் புதிய பாலம் ஓரத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்தது. இதைக் கண்ட உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் லோகநாதனை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்பட்டது.

இதுகுறித்து, குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் குமாரபாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் காவிரி ஆற்றின் தண்ணீரில் பரிசல் மூலம் சென்று பல்வேறு பகுதிகளில்  செவ்வாய்க்கிழமை காலை முதல் தேடும் பணியில் ஈடுபட்டனர். காவிரி ஆற்றில் திங்கள்கிழமை பவானி பகுதியில் ஒரு சடலம் கரை ஒதுங்கியதாகவும், ஆற்றில் தண்ணீர் கூடுதலாக வந்ததால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ADVERTISEMENT

இத்தகவலால் லோகநாதன் தற்கொலை செய்துகொண்டிக்கலாம் என நம்பப்படுகிறது.
 

Tags : Suicide
ADVERTISEMENT
ADVERTISEMENT