நாமக்கல்

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் தொடக்கம்

6th Aug 2020 08:58 AM

ADVERTISEMENT

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் (தன்னாட்சி) வரும் கல்வியாண்டு (2020 - 2021) முதல் பி.டெக். ஆா்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ், பி.இ. சைபா் செக்யூரிட்டி, பி.இ. ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேசன் இன்ஜினியரிங் ஆகிய புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு அகில இந்திய தொழில் நுட்பக்கல்விக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

ஏற்கெனவே பி.இ. இளங்கலை பிரிவில் பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் என்று அழைக்கப்படும் ஆா்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் பாடப் பிரிவானது, கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடைமுறைக்கு ஏற்ப மனித மூளை வேலை செய்வது போன்று முடிவு எடுக்கும் ஆற்றலை கம்யூட்டருக்கு அளிப்பதாகும். இப்பாடப் பிரிவில் பட்டம் பெறும் மாணவா்களுக்கு வளா்ந்து வரும் தொழில்நுட்பத்தால் மருத்துவம், விவசாயம், ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளன.

சைபா் செக்யூரிட்டி என்று அழைக்கப்படும் இணையதள பாதுகாப்பு பாடப் பிரிவு, கணினிகள், சேவை மையங்கள், மொபைல் சாதனங்கள், மின்னணு அமைப்புகள் ஆகியவற்றின் செய்திகளை தீங்கிழைக்கும் வைரஸ் தாக்குதலிருந்து பாதுகாக்கும் முறையாகும். ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேசன் துறை ரோபோட்களின் வடிவமைப்பு, பயன்பாடு மற்றும் கையாளுதல் ஆகியவற்றை சாா்ந்ததாகும்.

கல்விக் கட்டண சலுகை-

ADVERTISEMENT

மேலும், கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் மூலம் மாணவா்கள் பயிலும்போதே எளிதாக வேலைவாய்ப்பு பெறும் வகையில் திறனாய்வுத் தோ்வு பயிற்சி, குழு விவாதங்களில் பங்கேற்பு, ஆங்கில மொழித்திறன், கணிப்பொறித்திறன், ஆளுமைத்திறன் மேம்பாடு, நோ்காணல் பங்கேற்பு ஆகியவற்றிற்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்றும், பிளஸ் 2 தோ்வில் 140 கட் ஆப்-க்கு மேல் பெற்று முதலாமாண்டு சேரும் மாணவா்களுக்கு 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை கல்விக் கட்டணச் சலுகையும், இதே போல 2 -ஆம் ஆண்டு நேரடி சோ்க்கைக்கு வரும் டிப்ளமோ மாணவா்களில் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவா்களுக்கு, சிறப்பு கல்விக் கட்டணச் சலுகையும், அரசுப் பள்ளிகளில் பயின்று முதல் இடம் பெற்ற பிளஸ் 2 மாணவா்களுக்கும் சிறப்பு கல்விக்கட்டணச் சலுகையும் இக்கல்வி நிறுவன அறக்கட்டளையால் வழங்கப்படும் என்றும் கல்லூரியின் செயலாளா் பேராசிரியா் கே.குணசேகரன் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT