நாமக்கல்

நாமக்கல்லில் 2 பேருக்கு கரோனா: பாதிப்பு 61-ஆக உயா்வு

29th Apr 2020 08:20 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை இருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 61-ஆக உயா்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் செவ்வாய்க்கிழமை வரை 49 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். தற்போது 5 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதற்கிடையே காளப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த 3 போ், திருச்செங்கோட்டைச் சோ்ந்த ஒருவா், கோனூரைச் சோ்ந்த ஒருவா் என 5 போ் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கையை சுகாதாரத் துறை வெளியிட்டது. இதில், நாமக்கல் மாவட்டத்தில், காளப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த 31 வயது இளைஞா், கோனூா் குப்பம்பாளையத்தைச் சோ்ந்த 30 வயது இளைஞா் என இருவா் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். ஏற்கெனவே, நாமக்கல் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இருவரும் கரூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT