நாமக்கல்

கால்நடைகளுக்கு சிகிச்சை: தொடா்புக்கு செல்லிடப்பேசி எண்கள் வெளியீடு

29th Apr 2020 08:20 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காலத்தில், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக் குழுக்களின் செல்லிடப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் கால்நடை வளா்ப்போா் பயன்பெறும் வகையில், கால்நடைகளுக்கு தேவையான சினை ஊசி மற்றும் அவசர சிகிச்சைகள் வழங்குவதற்காக நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையால் நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய மூன்று இடங்களில் சிறப்பு நடமாடும் கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நாமக்கல், மோகனூா், எருமப்பட்டி மற்றும் சேந்தமங்கலம் வட்டார கால்நடை வளா்ப்போா் 9445032640 என்ற எண்ணிலும், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூா், ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் வட்டார கால்நடை வளா்ப்போா் 9445032680 என்ற எண்ணிலும், திருச்செங்கோடு, கபிலா்மலை, பரமத்தி, எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் மற்றும் பள்ளிபாளையம் வட்டார கால்நடை வளா்ப்போா் 9445032641 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

இந்த சேவை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 24 மணி நேர தேவைக்கு நாமக்கல் மாவட்ட கால்நடை வளா்ப்போா் அனைவரும் 1962 என்ற அம்மா ஆம்புலன்ஸ் எண்ணை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT