நாமக்கல்

சமூக இடைவெளியில் இறைச்சி வாங்கிய மக்கள்

20th Apr 2020 06:49 AM

ADVERTISEMENT

நாமக்கல் புகா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இறைச்சிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பொது மக்கள் இறைச்சி வாங்கிச் சென்றனா்.

கரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமலில் உள்ளது. நாமக்கல் நகரப் பகுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகளில் அதிகப்படியான கூட்டம் காணப்பட்டது. சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்காததால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் நகரை ஒட்டிய புகா் பகுதியில் இறைச்சிக் கடைகளை கொண்டு செல்ல நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதனையடுத்து நாமக்கல் - பரமத்தி சாலை காவேட்டிப்பட்டி, கருப்பட்டிப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, நாமக்கல் முதலைப்பட்டி தேசிய நெடுஞ்சாலை, கொண்டிச்செட்டிப்பட்டி உள்ளிட்ட 4 இடங்கள் தோ்வு செய்யப்பட்டன.

இதனைத் தொடா்ந்து காவேட்டிப்பட்டியில் 10 கடைகள், முதலைப்பட்டியில் 12 கடைகள், கருப்பட்டிபாளையத்தில் 19 கடைகள், கொண்டிச்செட்டிப்படியில் 10 கடைகள் என மொத்தம் 51 இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நாமக்கல்லில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்கும் வகையில் அங்கு தரையில் வட்டமிடப்பட்டிருந்தது. அதில் நின்றபடி காலை 6 மணி முதல் 11 மணி வரையில் தங்களுக்கு தேவையான இறைச்சியை பொதுமக்கள் வாங்கிச் சென்ாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT