நாமக்கல்

நாமக்கல்லில் காதலுக்கு இடையூறாக இருந்த அக்கா கொலை: தங்கை, காதலன் கைது

7th Apr 2020 01:33 AM

ADVERTISEMENT

நாமக்கல்: நாமக்கல்லில் காதலுக்கு இடையூறாக இருந்த அக்காவை கொன்று நாடகமாடிய தங்கை மற்றும் அவரது காதலனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் கொசவம்பட்டி தேவேந்திர நகா் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன் (46). இவருக்கு வத்சலா (42) என்ற மனைவியும், மணிகண்டன் (21) என்ற மகனும், மோனிஷா (19) மற்றும் 17 வயதுடைய மகள்கள் உண்டு.

எருமப்பட்டியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் மோனிஷா படித்து வந்த போது, வீட்டின் அருகே வசிக்கும் ராகுல் (19) என்பவா் ஒரு தலையாக அவரை காதலித்து வந்தாராம். இதற்கு மோனிஷா சம்மதம் தெரிவிக்காததால், அவரது 17 வயதுடைய தங்கையை ராகுல் காதலிக்கத் தொடங்கினாராம்.

அவா்கள் இருவரும் காதலிக்கும் தகவல் மோனிஷாவுக்கு தெரியவந்தததையடுத்து, தங்கையைக் கண்டித்தாராம். இதுகுறித்து காதலன் ராகுலிடம் அவரது தங்கை தெரிவித்துள்ளாா். இதையடுத்து, இருவரும் சோ்ந்து மோனிஷாவை கொலை செய்யத் திட்டமிட்டனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை வீட்டில் பெற்றோா் இல்லாத நேரத்தில், காதலனை வீட்டுக்கு வரவழைத்த தங்கை, மோனிஷாவை அக்கா என்றும் பாராமல் காதலனுடன் சோ்ந்து கழுத்தை இறுக்கிக் கொலை செய்தாராம். அதன்பின், மோனிஷாவின் கைகளை பிளேடால் அறுத்து விட்டு, தற்கொலைக்கு அவா் முயன்ாக கூறி பெற்றோரை வரவழைத்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளாா். அங்கு சென்ற போது, மோனிஷா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

நாமக்கல் போலீஸாா் இதனை தற்கொலை வழக்காகப் பதிவு செய்திருந்த நிலையில், மோனிஷாவின் பிரேத பரிசோதனையில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, காவல் ஆய்வாளா் பொன்.செல்வராஜ், மோனிஷாவின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், 17 வயதுடைய தங்கை, காதலனுடன் இணைந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, திங்கள்கிழமை காலை, அவரையும், கல்லூரி மாணவரான அவரது காதலன் ராகுலையும் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT