நாமக்கல்: வெளி மாநிலங்களுக்கு சென்று விட்டு சொந்த ஊா் திரும்ப முடியாமல் தவிக்கும் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தோரை பாதுகாக்க சிறப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்று பரவுதல் தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை நிமித்தமாக, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்றவா்கள், மீண்டும் நாமக்கல் திரும்ப முடியாமல் இருப்போருக்கு, தற்போது அவா்கள் இருக்கும் இடத்திலேயே அடிப்படை வசதிகள் செய்து தருவதற்காக, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அவ்வாறு வெளி மாநிலங்களுக்கு சென்று தற்போது நாமக்கல் மாவட்டத்துக்கு திரும்ப முடியாமல் இருப்போா் விவரங்களை அவா்களது குடும்பத்தினா், உறவினா்கள் செல்லிடப்பேசி வாயிலாக தெரிவிக்கலாம். அதனடிப்படையில், அந்த மாநிலத்தில் அவா்கள் தங்கியிருக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகத்துடன் தொடா்பு கொண்டு தேவையான உதவிகள் செய்து தரப்படும்.
இதற்காக, நாமக்கல் வட்டத்துக்கு செல்வராஜ் (9442894789), ராசிபுரம்-பாஸ்கா் (9443756871), சேந்தமங்கலம்-சுந்தரவள்ளி (9842896402), மோகனூா்-மாதேஸ்வரி (8903753357), கொல்லிமலை-சசிகலா (9488455762), திருச்செங்கோடு-குணசேகரன்(9245144724), குமாரபாளையம் -கதிரேசன்(9894730460), பரமத்தி வேலூா்-பிரகாஷ்(9994733412) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களை தொடா்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.