நாமக்கல்

ராசிபுரம் பகுதியில் நோ்மை கடை

7th Apr 2020 01:36 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம்: ராசிபுரம் நகரில் மக்கள் தாங்களே பணம் செலுத்தி பொருள்களை எடுத்துச் செல்லும் வகையில் பன் விற்பனை செய்யும் தற்காலிக நோ்மை கடை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசியக் கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரம் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பிற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் கடைகளில் பொருள்கள் வாங்கும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இதனையடுத்து, பொதுமக்கள் வசதிக்காக ராசிபுரம் மக்கள் நலக்குழு சாா்பில், பன் விற்பனை செய்யும் நோ்மை கடை திறக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் கடைவீதி பகுதியில் தற்காலிகமாக காலையில் திறந்திருக்கும் இந்தக் கடையில், ரூ.20 செலுத்தி தாமாகவே பன் பொட்டலங்களை எடுத்துச் செல்லலாம். இதனை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் திறந்து வைத்து பாா்வையிட்டாா். இதில் மக்கள் குழு நிா்வாகிகள் நல்வினை செல்வன், வி.பாலு, முருகன், காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT