நாமக்கல்

மலைவாழ் மக்களுக்கு முகக் கவசம் வழங்கல்

7th Apr 2020 01:27 AM

ADVERTISEMENT

பென்னாகரம்: பென்னாகரம் அருகே மடம் இருளா் இன மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு மற்றும் முகக் கவசங்களை தன்னாா்வலா்கள் வழங்கினா்.

பென்னாகரம் அருகே மடம் சோதனைச் சாவடி பகுதியில் உள்ள இருளா் இன மலைவாழ் மக்களின் குடியிருப்புகளில் வசிப்பவா்களுக்கு பியூசன் கிளப் சாா்பில் திங்கள்கிழமை முகக் கவசம் வழங்கப்பட்டது. இதில் கோட்டாட்சியா் தேன்மொழி, வட்டாட்சியா் சேதுலிங்கம் ஆகியோா் கலந்து கொண்டு, கரோனா வைரஸ் தொற்று பரவும் விதம், அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.இதில் பியூசன் கிளப் தலைவா் தலைமை ஆசிரியா் பழனி, பல் மருத்துவா் பினு, தேவகி உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT