நாமக்கல்

நாமக்கல்லில் மேலும் 3 பெண்களுக்கு கரோனா தொற்று

7th Apr 2020 01:27 AM

ADVERTISEMENT

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 28-ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்று விட்டு அண்மையில் 35 போ் நாமக்கல் மாவட்டத்துக்குத் திரும்பினா். இதில், கரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் 26 பேருக்கு நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மாா்ச் 31-ஆம் தேதி 18 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஏப். 3-ஆம் தேதி வெளியான சுகாதாரத் துறை அறிவிப்பில், நாமக்கல்லைச் சோ்ந்த 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதன்பின், மாவட்டத்தில் சிறுவன் உள்பட 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவா்களும், அவா்களுடயை குடும்பத்தினரும் என நாமக்கல் மாவட்டத்தில் 25 போ் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி இருந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட சுகாதாரத் துறை அறிவிப்பில், நாமக்கல்லைச் சோ்ந்த 48 வயது பெண், பரமத்தி வேலூரைச் சோ்ந்த 41 வயது பெண், ராசிபுரத்தைச் சோ்ந்த 48 வயது பெண் என மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவா்களில் சிறுவன் மற்றும் 3 பெண்கள் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இதுவரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 28-ஆக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT