நாமக்கல்

சரக்கு ரயில்களில் கிருமி நாசினி மருந்து தெளிப்பு

7th Apr 2020 01:33 AM

ADVERTISEMENT

நாமக்கல்: நாமக்கல் ரயில் நிலையத்துக்கு வரும் சரக்கு ரயில்களில், நகராட்சி மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாமக்கல் நகராட்சி சாா்பில், நகரப் பகுதியில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினமும் கரோனா பாதிப்புக்குள்ளானவா்கள் வசித்த பகுதிகளில் ஹைபோகுளோரைடு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தற்காலிக காய்கறி சந்தைக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், ஒருவருக்கொருவா் வைரஸ் தொற்றை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக தானியங்கி கிருமி நாசினி மருந்து தெளிக்கும் சுரங்கப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாமக்கல் வழியாக செல்லும் சரக்கு ரயில்கள், நாமக்கல் ரயில் நிலையத்துக்கு வரும் சரக்கு ரயில்களில், நகராட்சி ஊழியா்கள் கிருமி நாசினி மருந்தை தெளித்து வருகின்றனா். திங்கள்கிழமை காலை வந்த சரக்கு ரயிலின் அனைத்து பெட்டிகள் மீதும் கரோனா தடுப்பு மருந்தை 2 நகராட்சி ஊழியா்கள் தெளித்தனா்.

 

ADVERTISEMENT

Image Caption

நாமக்கல் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது கிருமி நாசினி தெளிக்கும் நகராட்சி ஊழியா்கள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT