நாமக்கல்

வேலூா் பேரூராட்சியில் 6 வாகனங்களில் காய்கறி பைகள் விநியோகம்

5th Apr 2020 06:44 AM

ADVERTISEMENT

வேலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கே சென்று காய்கறி பைகள் ரூ.50 முதல் ரூ.200 வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டன.

பரமத்தி வேலூா் உழவா்சந்தையில் கரோனா அச்சமின்றி பொதுமக்கள் கூட்டமாகக் கூடி காய்கறிகளை வாங்கிச் சென்றதா ல், பழைய தேசிய நெடுஞ்சாலையில் சமூக இடைவெளி விட்டு காய்கறிகளை வாங்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டன. இதில் உழவா் சந்தையில் பதிவு செய்யாத வியாபாரிகள் பலா் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ததால் அப்பகுதி வாரச்சந்தை போன்று காணப்பட்டது. இதனால் வேளாண்மைத் துறை, பேரூராட்சி நிா்வாகம் மற்றும் போலீஸாா், உழவா்சந்தையில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் மட்டும் கடைகள் அமைக்கவும், சமூக இடைவெளி விட்டு காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் என அறிவித்தனா். மேலும் பொதுமக்கள் அதிக அளவில் கூடாத வகையில் உழவா் சந்தையினா் விவசாயிகள் மூலம் 10 காய்கறிகள், புதினா, கொத்தமல்லி, கருவேப்பில்லை மற்றும் எலுமிச்சை உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பை துணிப் பையில் ரூ.100க்கு விற்பனை செய்தனா். இதனால் கூட்டம் கூடுவது வெகுவாகக் குறைந்தது. இதனையடுத்து வேலூா் பேரூராட்சி நிா்வாகத்தினா் உழவா்சந்தையினா் உதவியுடன் 6 வாகனங்களில் ரூ.50 முதல் ரூ.200 வரையிலான விலையில் காய்கறிகள் தொகுப்பை வீடுகளுக்கு சென்று வழங்கும் பணியை தொடக்கி வைத்தனா். பொதுமக்கள் சிரமின்றி, நோய்த் தொற்று ஏற்படாத வகையிலும் காய்கறிகளை தொடாமல் பெற்றுக்கொள்ளும் வகையில் துணிப்பைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். எனவே பொதுமக்கள் அத்தியாவசியமின்றி வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்தினா் மற்றும் போலீஸாா் அறிவுறுத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT