நாமக்கல்

முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ.3.55-ஆக நிா்ணயம்

5th Apr 2020 06:47 AM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ.3.55-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விற்பனை அதிகரித்துள்ளதன் அடிப்படையிலும், பிற மாநிலங்களில் முட்டை விலை நாளுக்கு நாள் உயா்ந்து வருவதால், இங்கும் விலையை உயா்த்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமைக்கான முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையில் 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ.3.55-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

பிற மண்டலங்களின் விலை நிலவரம் (காசுகளில்): ஹைதராபாத் -340, விஜயவாடா - 345, பாா்வாலா - 235, ஹோஸ்பெட் - 235, மைசூரு - 357, சென்னை - 380, மும்பை - 395, பெங்களூரு - 350, கொல்கத்தா - 400, தில்லி - 245.

இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.77-ஆகவும், முட்டைக்கோழி கிலோ ரூ.32-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT