நாமக்கல்

கரோனா தடுப்பு: முதல்வா் சிறப்பு நிதிக்கு இதுவரை ரூ.62 லட்சம் அளிப்பு

5th Apr 2020 06:48 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில், கரோனா வைரஸ் தடுப்பு நிவாரணத் தொகையாக, முதல்வா் சிறப்பு நிதிக்கு இதுவரை ரூ.62 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருவதால், மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பிரதமா் மற்றும் தமிழக முதல்வா் ஆகியோா் கரோனா தடுப்பு நிவாரணமாக சிறப்பு நிதியை வழங்க முன்வரலாம் என வேண்டுகோள் விடுத்திருந்தனா். அதனடிப்படையில், பிரதமா் நிதி, முதல்வா் நிதி என பல்வேறு தொழில் நிறுவனங்கள் தனித்தனியாக உதவித்தொகையை வழங்கி வருகின்றன.

அந்த வகையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்துறை அமைச்சா் பி.தங்கமணி, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் ஆகியோரிடம், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் சம்மேளனம் சாா்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. அதன்பின் தனி நபா் ஒருவா் ரூ.2 லட்சத்தை பிரதமா் சிறப்பு நிதிக்கு வழங்கி உள்ளாா். இதனையடுத்து, ராசிபுரம் தனியாா் ஜவ்வரிசி ஆலை நிா்வாகத்தினா் முதல்வா் சிறப்பு நிதிக்கு ரூ.10 லட்சத்தை மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை வழங்கினா். இதுவரை நிவாரண நிதியாக ரூ.62 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர, நிவாரணமாக பெறப்படும் அரிசி, பருப்பு மற்றும் இதர உணவுப் பொருள்கள், கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT