நாமக்கல்

எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை

17th Sep 2019 10:08 AM

ADVERTISEMENT

நாமக்கல் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்தில் சங்கத் தேர்தல் நடத்துவதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து, பொறுப்புக் குழு தலைவரும், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான சுந்தரராஜனிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.
 மனுவில் கூறியிருப்பதாவது:-
 நடைபெற்று முடிந்த டெண்டரில் வேலைவாய்ப்பு கிடைக்காத டேங்கர் வாகனங்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதோ அல்லது நஷ்ட ஈடோ வழங்க வேண்டும், கடைசியாக நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் 5 பேர் கொண்ட கமிட்டி அமைத்து, நஷ்டஈடு வழங்குவதாக உத்தரவாதம் அளித்த நிலையில், கமிட்டியை அமைக்காமல் ஏமாற்றிவிட்டு தற்போது தேர்தலை நடத்த பரிந்துரை செய்துள்ளது கண்டிக்கத்தக்கது, உடனடியாக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT