ஜேடர்பாளையம் அருகேயுள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் நடைபாதை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்டிருந்த குடிசை அகற்றப்பட்டது.
கொத்தமங்கலம் கிராமத்தில், பூங்கொடி என்பவர் ஆக்கிரமிப்பு செய்து குடிசை போட்டிருந்தார்.
தகவலின்பேரில் பரமத்திவேலூர் மண்டலத் துணை வட்டாட்சியர் சசிக்குமார், டிஎஸ்பி பழனிசாமி, காவல் ஆய்வாளர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் விஜயகுமாரி உள்ளிட்டோர் அங்கு சென்றனர். இதையடுத்து, குடிசை அகற்றப்பட்டது.