நாமக்கல்

முட்டை விலை மீண்டும் 2 காசுகள் உயர்வு

10th Sep 2019 10:35 AM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் 2 காசுகள் உயர்ந்து ரூ.3.53-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்தில், செவ்வாய்க்கிழமைக்கான முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடையே ஆலோசிக்கப்பட்டது.
இதில், முட்டை பண்ணைக் கொள்முதல் விலையை மீண்டும் 2 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒரு முட்டை விலை ரூ.3.53-ஆக நிர்ணயிக்கப்பட்டது. 
இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.71-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT