நாமக்கல்

வணிகவரித் துறை கலந்தாய்வுக் கூட்டம்

7th Sep 2019 09:42 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் வணிக வரித் துறை சார்பில், ஜி.எஸ்.டி. தாக்கல் செய்வது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட வணிகவரித் துறை துணை ஆணையர் அலுவலகம் சார்பில்,  ஜி.எஸ்.டி.ஆர்.9/9ஏ மற்றும் 9சி தாக்கல் செய்வது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்,  நாமக்கல் கணேசபுரம் பெரியார் மன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இதில், நாமக்கல் துணை ஆணையர் ஆர்.உதயகுமார் தலைமை வகித்தார்.  சேலம் அஸ்தம்பட்டி சரக உதவி ஆணையர் பி.தனசேகரன்,  மாநில வரி அலுவலர் ஆர்.யாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஜி.எஸ்.டி. தாக்கல் தொடர்பாகவும், அதில் உள்ள குறைபாடுகளை களைவது தொடர்பாகவும் அதிகாரிகளால் நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.  இந்த கூட்டத்தில், பட்டயக் கணக்காளர்கள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT