நாமக்கல்

வட்ட அளவிலான தடகளப் போட்டியில் பரமத்தி மலர் பள்ளி சாதனை

7th Sep 2019 09:42 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூர் வட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் பெற்று சாதணை படைத்தனர்.
பரமத்தி வேலூர் வட்ட அளவிலான தடகளப் போட்டிகள் பொத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.  இப் போட்டியில் 66 பள்ளிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.   இதில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தனுஷ் 200 மீட்டர் மற்றும் 4*100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயப் போட்டியில் இரண்டாம் இடத்தையும், மாணவர்கள் மோனீஷ்,செல்வக்குமார் ஆகியோர் 4*100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்றனர்.  17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவர் கிஷோர் 1500 மீட்டர்,   800 மீட்டர் மற்றும் 4*100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தையும்,மாணவர் கவிபிரவு 400*100 தொடர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தையும், 400 மீட்டர்,800 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றார்.
மாணவர் கிஷோர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தையும், 110 மீட்டர் தடை தாண்டி ஓடும் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றார்.  மாணவர் கோகுல் ஈட்டி எறிதல் மற்றும் 400*100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தையும்,மாணவர் மோகன்ராஜ் 110 மீட்டர் தடை தாண்டி ஓடும் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தையும்,மாணவர் சங்கர் வட்டு எறிதல் போட்டியில் முதலிடத்தையும் பெற்றனர். 
19 வயதுக்கு  உட்பட்டோர் பிரிவில் மாணவர் ஜெயசூர்யா 400 மீட்டர், 800 மீட்டர்,4*100 மீட்டர் ஆகிய ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், நீளம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் 
இடம் பெற்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார்.  மாணவர் திவாகர் 100 மீட்டர்,200 மீட்டர்,4*100 மீட்டர் ஆகிய போட்டிகளில் முதலிடத்தையும்,110 மீட்டர் தடைதாண்டி ஓடும் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார்.         பரமத்தி வேலூர் வட்ட அளவிலான தடகள போட்டியில் பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 124 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர்.  தடகள போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவர் பழனியப்பன், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் கந்தசாமி,  துணைத் தலைவர் சுசீலா ராஜேந்திரன்,துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி தங்கராஜ்,  இயக்குநர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT