நாமக்கல்

திருச்செங்கோட்டில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

7th Sep 2019 09:42 AM

ADVERTISEMENT

திருச்செங்கோடு அருகேயுள்ள மல்லசமுத்திரம் மேட்டுப்பாளையம் குப்பங்காட்டுக்கு  நிலப் பிரச்னை சம்பந்தமாக விசாரணைக்கு சென்ற திருச்செங்கோடு டி.எஸ்.பி. சண்முகம் வழக்குரைஞர் சுரேஷ் என்பவரை தரக்குறைவாகவும், நீதிமன்றங்களை அவமதிக்கும் விதமாக பேசியதாகவும் தெரிவித்து திருச்செங்கோடு வழக்குரைஞர்கள் நீதிமன்றம் அருகில் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்ட வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு சார்பில்  திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல்,  திருச்செங்கோடு, ராசிபுரம்,  பரமத்திவேலூர் ஆகிய நகரங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சுமார் 300 பேர் பங்கேற்றனர்.  
தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் அய்யாவு தலைமை வகித்தார்.  திருச்செங்கோடு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் உலகநாதன்,  செயலாளர் மாணிக்கவேலு, , பார் அசோசியேன்  (சிவில் பிரிவு ) தலைவர் சேகரன்,  பார் அசோசியேஷன் (கிரிமினல் பிரிவு)  தலைவர் வெங்கட் கண்ணன்,  நாமக்கல் தலைவர் முனிராஜ்,  ராசிபுரம் தலைவர் காமராஜ், பரமத்திவேலூர் தலைவர் சரவணக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.  திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகத்தை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT