நாமக்கல்

சிக்குன் குனியா, கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

7th Sep 2019 09:39 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி அருகே உள்ள பிள்ளைக்களத்தூரில் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பரமத்திவேலூரை அடுத்துள்ள பிள்ளைகளத்தூரில் நல்லூர் வட்டார சுகாதாரத் துறை சார்பில் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கெளரி பேரணிக்கு தலைமை வகித்தார்.  பரமத்தி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.  பேரணியை பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர்,தனம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பேரணி பிள்ளைக்களைத்தூர் விநாயகர் கோயில் முன்பு துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயில் வளாகத்தை வந்தடைந்தது.  பேரணியில் கொசுவினால் ஏற்படும் பாதிப்புகள்,அதை தடுக்கும் முறைகள்,சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ளுதல்,மழை நீர் தேங்காதபடி பார்த்துக்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் பரமத்தி வேலூர் தேர்தல் துணை வட்டாட்சியர் கண்ணன்,மருத்துவ அலுவலர்கள் சண்முகவடிவு,கலையரசி,பிள்ளைக்களத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி,சுகாதார ஆய்வாளர்கள் நவலடியான், ராஜ்குமார், திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT