நாமக்கல்

கோழிகளுக்கான தீவனத்தில் அஃப்ளா நச்சின் தாக்கம் அதிகரிப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

7th Sep 2019 09:45 AM

ADVERTISEMENT

கோழிகளுக்கான  தீவனத்தில்  அஃப்ளா நச்சின் தாக்கம் அதிகம் உள்ளதால்,  அதனை பரிசோதித்த  பின்னரே வழங்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: வரும்  நான்கு நாள்களுக்கும் வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும்.  மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. காற்று 6 கிலோமீட்டர் வேகத்தில் தென் மேற்கிலிருந்து வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 93.2 டிகிரியும், குறைந்தபட்சம் 73.4 டிகிரியாகவும் இருக்கும். 
சிறப்பு வானிலை ஆலோசனை: வானம் பொதுவான மேகமூட்டத்துடனும்,  மழையற்றும் காணப்படும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு. காற்றின் வேகம் மிதமானதாக இருந்தாலும், பிற்பகலுக்கு மேல் அதிக வேகத்துடன் காற்று வீசக்கூடும். இதனால் கோழிகளுக்கு தீவன எடுப்பு மற்றும் உற்பத்தி இயல்பாக காணப்பட்டாலும், முட்டை ஓட்டின் தரம் மற்றும் தீவனத்தில் அஃப்ளா நச்சு ஆகியவை அதிகமாக காணப்படும். கொள்முதல் செய்யப்படும் தீவன மூலப்பொருள்களில் குறிப்பாக மக்காச்சோளம், கம்பு, கடலைப்புண்ணாக்கு ஆகியவற்றில் பூஞ்சான் நச்சுப் பரிசோதனை செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும். மேலும், சோயாபுண்ணாக்கில் புரதத்தின் அளவு குறைந்து காணப்படுகிறது, இத்தகைய மூலப்பொருள்களை இனம் கண்டு அதற்கேற்றாற் போல், தீவன விகிதாசாரத்தை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT