நாமக்கல்

காவிரியில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மாயம்

7th Sep 2019 09:42 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் படுகை அணை பகுதிக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்த ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் காவிரியில் அடித்துச்  செல்லப்பட்டார். காவிரியில் அடித்துச் செல்லப்பட்ட மாணவரை ஜேடர்பாளையம் போலீசார் தீயணைப்புதுறையினர் மற்றும் மீனவர் உதவியுடன் தேடி வருகின்றனர்.
 ஈரோடு மரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜாகீர்உசேன் மகன் முகமதுதன்சீர் (21).  இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு பயின்று வந்தார்.  இவர் தனது நண்பர்களுடன் வெள்ளிக்கிழமை ஜேடர்பாளையம் படுகை அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.  அங்குள்ள பூங்காவை சுற்றிப் பார்த்து விட்டு பின்னர் காவிரி ஆற்றில் உள்ள படுகை அணை பகுதிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளனர். அப்பொழுது முகமது தன்சீர் காவிரியில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள பகுதிக்கு சென்று குளித்தார்.  இதில் அவர் காவிரியாற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.  இதை பார்த்த அவர்களது நண்பர்கள் அங்கிருந்த பொதுப்பணித்துறையினர்  மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  தகவலின் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீசார் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீனவர்கள் உதவியுடன் காவிரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட முகமது தன்சீரைத் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT