நாமக்கல்

ஈமு நிறுவனத்தின் 5 ஏக்கர் நிலத்தை ஏலத்தில் விட முடிவு

7th Sep 2019 10:44 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் செயல்பட்ட ஈமு கோழிப்பண்ணை நிறுவனத்துக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலம் ஏலத்தில் விடப்படுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவில், கொங்குநாடு ஈமு கோழிப்பண்ணை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு,  நீதிமன்ற விசாரணையில் உள்ளது.  அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான, 5 ஏக்கர் அசையா நிலம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் பட்டக்காரன்பாளையம் கிராமத்தில் உள்ளது. தற்போது அந்த நிலம் கைப்பற்றப்பட்டுள்ளது. 
கோவை சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், வரும் 17-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அங்குள்ள மாவட்ட வருவாய் அலுவலரால் ஏலம் விடப்படவுள்ளது. 
மேலும், ஏலம் விடப்படவுள்ள 5 ஏக்கர் நிலம் உள்ள இடத்தினை வாங்க விரும்புவோர் ஏலத் தேதிக்கு முன்பாக சென்று  பார்வையிடலாம்.  ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வரும் 17-ஆம் தேதி ஏலம் கேட்பதற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட வேண்டும். திரும்பத் தரக்கூடிய பிணை வைப்புத் தொகையாக ரூ.25 ஆயிரம்- ஏதேனும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில்,  "C‌o‌m‌p‌e‌t‌e‌n‌t A‌u‌t‌h‌o‌r‌i‌t‌y a‌n‌d D‌i‌s‌t‌r‌i​c‌t R‌e‌v‌e‌n‌u‌e O‌f‌f‌i​c‌e‌r, Na‌m​a‌k‌k​a‌l"  என்ற பெயரில் வரைவோலையாக(டி.டி) செலுத்தி பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT