நாமக்கல்

விபத்தில் கணவர் பலி: மனைவி காயம்

4th Sep 2019 09:35 AM

ADVERTISEMENT

கார் மோதிய விபத்தில் கணவர் உயிரிழந்தார். மனைவி காயம் அடைந்தார்.
 வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் செளந்திரராஜன் (47). இவரது மனைவி மகேஸ்வரி (42).
 இருவரும் திங்கள்கிழமை கூலி வேலைக்கு சென்று வீட்டு, மீண்டும் வீடு திரும்புவதற்காக புல்லாகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தனர்.
 இந்த நேரத்தில் இருவர் மீது திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் மோதியுள்ளது.
 இதில் பலத்த காயமடைந்த தம்பதியினர், கார் ஓட்டுநர் ரவி (45) ஆகிய மூவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செளந்திரராஜன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். பலத்த காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT