நாமக்கல்

விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

4th Sep 2019 09:37 AM

ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்திக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், மோகனூர், பரமத்திவேலூர், குமாரபாளையம் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.
 விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, சுவாமிக்கு வெள்ளி, தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டன. இதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
 இதுதவிர, மாவட்டம் முழுவதும் 708 இடங்களில் சாலையோரம், தெருக்களில் பல்வேறு வடிவ விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்தச் சிலைகளை மூன்று அல்லது ஐந்தாம் நாள் ஆற்றில் கரைப்பது வழக்கம். சிலர் மறுநாளே கரைக்கும் பணியை மேற்கொள்வர்.
 இதன்படி, நாமக்கல் வட்டத்தில் 151 இடங்களிலும், ராசிபுரத்தில் 183 இடங்களிலும், திருச்செங்கோட்டில் 277 இடங்களிலும், பரமத்திவேலூரில் 97 என மொத்தம் 708 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் மோகனூர், பரமத்திவேலூர், மொளசி, குமாரபாளையம் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.
 இதற்காக பக்தர்கள் வண்ணப்பொடிகளை தங்கள் மீது பூசிக்கொண்டு ஆட்டம், பாட்டத்துடன், வாகனங்களில் சிலையை வைத்தபடி நீர்நிலைகளுக்கு வந்தனர். மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயில் பின்புறம் காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை நடத்தி விநாயகர் சிலைகளை பக்தர்கள் கரைத்தனர். நாமக்கல், சேந்தமங்கலம், புதுச்சத்திரம், புதன்சந்தை, வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிலைகள் எடுத்து வரப்பட்டிருந்தன. ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்ததால், அசம்பாவிதத்தைத் தவிர்க்க போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் ஆற்றுப்படுகைகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT