நாமக்கல்

வாக்காளர் சரிபார்ப்பு முகாம் தொடக்கம்: ஆட்சியர் தகவல்

4th Sep 2019 09:35 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்பு முகாம் தொடங்கியுள்ளதாக ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது;-
 வாக்காளர் பட்டியலின் தரத்தை மேம்படுத்துதல், தகுதியுள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் என்ற நோக்கத்துடன் செப்.1 முதல் 30-ஆம் தேதி வரை வாக்காளர் சரிபார்ப்பு முகாமை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இந்த முகாமின் வாக்காளர்கள் தாங்களாகவே, வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்கலாம். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், வீடு, வீடாகச் சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள, விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை, பட்டியலில் சேர்க்கவும் அவர்கள் நடவடிக்கை எடுப்பர்.
 வாக்காளர்கள் பட்டியலில் உள்ள தங்களது பெயர், பிறந்த தேதி, வயது, உறவினர் பெயர், உறவினர் வகை, புகைப்படம், பாலினம் உள்ளிட்டவற்றை சரிபார்க்க முடியும்.
 விடுபட்ட வாக்காளர்கள், எதிர்கால வாக்காளர்கள், இடம் பெயர்ந்த, இறந்த வாக்காளர்களின் விவரங்கள் மற்றும் வாக்குச்சாவடி குறித்த ஆலோசனைகளும் சேகரிக்கப்படும். சஹற்ண்ர்ய்ஹப் யர்ற்ங்ழ்ள் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங் ல்ர்ழ்ற்ஹப் என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது யர்ற்ங்ழ் ஏங்ப்ல்ப்ண்ய்ங் என்ற கைப்பேசி செயலி மூலமாகவோ, 1950 என்ற வாக்காளர் உதவி எண்ணை அழைப்பதன் மூலமாகவோ, வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் உதவி மையத்தை அணுகி பயன்பெறலாம். திருத்தங்கள் ஏதேனும் மேற்கொள்ள வேண்டியிருப்பின், இந்திய கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம், உழவர் அடையாள அட்டை, பான் கார்டு, என்.பி.ஆர். மூலம் வழங்கப்பட்ட மின்னணு அட்டை, தண்ணீர், தொலைபேசி, மின்சாரம், எரிவாயு இணைப்பு பெற்றதற்கான ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை விண்ணப்பத்துடன் இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கலாம்.
 வாக்காளர்கள் தங்களது விவரங்களை முழுமையாக சரிபார்த்த பின், அக்டோபர் 15-ஆம் தேதியன்று வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வெளியிடப்படும். வாக்காளர்கள் அதனையும் சரிபார்த்து கொள்ளலாம். மேலும் 2020 ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் நபர்கள் (31.12.2001 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள்) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாளான அக்டோபர் 15 முதல் 30-ஆம் தேதி வரையில், அனைத்து வேலை நாள்களிலும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மைய அலுவலரிடம், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவை தொடர்பாக படிவங்கள் சமர்பிக்கலாம். மேலும், நவம்பர் 2, 3 மற்றும் 9, 10 ஆகிய விடுமுறை தினங்களில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்தி, சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றிற்கு மனு அளிக்கலாம். இம்மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, வரும் ஜனவரி 1 முதல் 15-ஆம் தேதிக்குள், தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் நாளில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும், இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி தங்களது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT