நாமக்கல்

மரக்கன்றுகள் நடக் கோரி விழிப்புணர்வு

4th Sep 2019 09:34 AM

ADVERTISEMENT

காவிரி ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடவு செய்யக் கோரி, நாமக்கல்லில் ஈஷா யோகா சார்பில் செவ்வாய்க்கிழமை விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 தலைக்காவிரியில் இருந்து திருவாரூர் வரையில், காவிரி ஆற்றின் இருபுறமும் கரைகளில், ஈஷா அமைப்பு சார்பில், காவேரி கூக்குரல் என்ற திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்வும் பணிக்காக, நாமக்கல்லில் பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி வடிவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் ஒருங்கினைப்பாளர் வரதராஜன் தலைமை வகித்தார். காலை 7.30 மணிமுதல் 9.00 மணி வரையில் ஈஷா உறுப்பினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தி, பேருந்து நிலையம், உழவர் சந்தை, ஆஞ்சநேயர் கோயில், நரசிம்மர் கோயில், பூங்கா சாலை உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் நின்றபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT