நாமக்கல்

பரமத்தி வேலூரில் செப். 6-இல் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

4th Sep 2019 09:35 AM

ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பரமத்தி வேலூரில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் செப்டம்பர் 6-இல் நடைபெறுகிறது.
 விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நாமக்கல், கொல்லிமலை, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், சேந்தமங்கலம், வேலகவுண்டம்பட்டி,வைப்பமலை,நாமகிரிபேட்டை, மல்லசமுத்திரம், கபிலர்மலை,பிலிக்கல்பாளையம்,பாண்டமங்கலம், பொத்தனூர்,வெங்கரை,பாலப்பட்டி, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 125 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலாளர் கோபிநாத் கூறியது:- திருச்செங்கோடு,எலச்சிபாளையம்,மல்லசமுத்திரம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இரையமங்கலம் காவிரி ஆற்றில் புதன்கிழமையும், பள்ளிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் செப்டம்பர் 8-இல் பள்ளிபாளையம் காவிரி ஆற்றிலும், நாமக்கல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் செப்டம்பர் 5-இல் மோகனூர் காவிரி ஆற்றிலும் கரைக்கப்படுகின்றன. இதுதவிர, கொல்லிமலையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வரும் 8-ஆம் தேதி அரப்பளீஸ்வரர் கோயில் அருகேயும் கரைக்கப்படுகிறது.
 இதேபோல், பரமத்தி வேலூர், வேலகவுண்டம்பட்டிக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் 6-இல் பரமத்தி வேலூர் கடைவீதி பகுதியில் இந்து எழுச்சி திருவிழா பொதுக்கூட்டம், விநாயகர் விசர்ஜன ஊர்வலத்துக்குப் பின்னர் காசி விஸ்வநாதர் கோயில் அருகே காவிரி கரையில் கரைக்கப்படுகிறது என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT