நாமக்கல்

தெலங்கானாவில் இருந்து 2,600 டன் அரிசி வருகை

4th Sep 2019 09:23 AM

ADVERTISEMENT

தெலங்கானா மாநிலத்தில் இருந்து நாமக்கல் மாவட்ட நியாய விலைக்கடைகளில் விநியோகிக்க, 2,600 டன் அரிசி சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.
 நாமக்கல் மாவட்டத்தில் 900-க்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள் உள்ளன. இங்கு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 35 கிலோ, 20 கிலோ என்ற அடிப்படையில் விலையில்லா அரிசி விநியோகிக்கப்படுகிறது.
 இந்த நிலையில், மாதம்தோறும் வழங்குவதற்காக, வட மாநிலங்களில் இருந்து உணவு வழங்கல் துறையால் அரிசி கொள்முதல் செய்யப்படும். அதன்படி, தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் இருந்து 2,600 டன் அரிசி 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்குக் கொண்டு வரப்பட்டது.
 இதன்பின்னர், அவை லாரிகளில் ஏற்றப்பட்டு, நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT