நாமக்கல்

தெரு நாய்கள் கடித்ததாக ஒரே நாளில் 16 பேருக்கு சிகிச்சை

4th Sep 2019 09:34 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூர் அரசினர் தலைமை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மட்டும் தெரு நாய்கள் கடித்ததாக 16 பேர் சிகிச்சை பெற்று சென்றனர்.
 பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் ஒரே தெருநாய் மட்டும் 6 பேரைக் கடித்துள்ளது. மேலும் பரமத்தி,பாண்டமங்கலம்,பொத்தனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 பேரை வெவ்வேறு தெருநாய்கள் கடித்துள்ளன. இவர்கள் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் நாய் கடிக்கான சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.
 இவர்களுக்கு மருத்துவ அலுவலர் சாந்தி தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
 இந்த நிலையில் தெரு நாய்களை உடனடியாகப் பிடித்து வனப் பகுதியில் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT