நாமக்கல்

திறன் மேம்பாட்டுப் பயிற்சி

4th Sep 2019 09:34 AM

ADVERTISEMENT

அட்மா திட்டத்தின் கீழ், கொல்லிமலை வட்டாரத்துக்குள்பட்ட திருப்புளிநாடு வருவாய்க் கிராமத்தில் உள்ள ஊர்புரம் கிராமத்தில் உழவர் ஆர்வலர்கள், குழு உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாடு, ஆதரவு சேவைகள் குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி அண்மையில் வழங்கப்பட்டது.
 முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி தலைமை வகித்தார். வட்டார வேளாண்மை அலுவலர் சத்தியபிரகாஷ், பாரம்பரியம் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத் தலைவர், அசோக்குமார், உதவி வேளாண்மை அலுவலர் காமராஜ், வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் மா.ரமேஷ், கவிசங்கர் ஆகியோர் பயிற்சி அளித்தனர். கிராம விவசாயிகள் பழனி, செல்வம், குமார் ஆகியோர் தங்களது அனுபவங்களை விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டனர்.
 
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT