நாமக்கல்

சந்தைகள், ஆலைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு

4th Sep 2019 09:34 AM

ADVERTISEMENT

வெல்லம், சர்க்கரை விற்பனை சந்தைகள், வெல்ல உற்பத்தி ஆலைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
 பரமத்தி வேலூர் வட்டத்தில் விளையும் கரும்புகளைக் கொண்டு உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை விவசாயிகள் தயார் செய்கின்றனர்.
 பின்னர், இவற்றை 30 கிலோ அளவில் மூட்டைகளாக்கி பிலக்கல்பாளையத்தில் சனி, புதன்கிழமைகளில் நடைபெறும் வெல்ல ஏலச் சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
 இந்த நிலையில், வெல்லத்தில் ரசாயனம், அஸ்கா சர்க்கரை கலப்படும் செய்வதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறையின் நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் அருண், பரமத்தி வேலூர் உணவுப் பாதுகாப்பு அலுவலர் பாண்டி ஆகியோர் செவ்வாய்க்கிழமை பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம், சர்க்கரை விற்பனை சந்தைகள், வெல்ல உற்பத்தி ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
 இந்த ஆய்வின்போது, வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியன பரிசோதனைக்காக மாதிரி எடுக்கப்பட்டன. இவை பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், சோதனையில் கலப்படம் செய்திருப்பது கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT