நாமக்கல்

கோழிகளுக்கான தீவன எடுப்பு இயல்பாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

4th Sep 2019 09:23 AM

ADVERTISEMENT

கோழிகளுக்கு சாதகமான வானிலை நிலவுவதால், தீவன எடுப்பு இயல்பான முறையில் இருக்கும் என்று நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 இதுதொடர்பாக அவர்கள் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது;-
 வரும் மூன்று நாள்களுக்கு வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை இரண்டு மில்லி மீட்டர் அளவில் பெய்யலாம். காற்று மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில், தென் மேற்கில் இருந்து வீசக்கூடும். வெப்ப நிலை அதிகபட்சமாக 89.6 டிகிரியும், குறைந்தபட்சம் 77 டிகிரியுமாக இருக்கும்.
 சிறப்பு வானிலை ஆலோசனை: தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் மிதமான அளவில் தொடர்ந்தாலும், பிற்பகலுக்கு மேல் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சாதகமான வானிலையே, வரும் நாள்களில் காணப்படும் என்பதால், கோழிகளின் தீவன எடுப்பு இயல்பாகவும், முட்டை உற்பத்தி, எடையும் இயல்பான அளவில் காணப்படும்.
 வட மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், அங்கிருந்து கொள்முதல் செய்யப்படும் பொருள்களான மக்காச்சோளம், கம்பு, கடலைப் புண்ணாக்கு ஆகியவற்றில் பூஞ்சான் நச்சு, அப்ளா நச்சு அதிகம் காணப்படுகிறது. அவற்றின் உபயோகத்தில் மிகுந்த கவனம் தேவை என்றனர்.
 
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT