நாமக்கல்

குளிர்பதனக் கிடங்குகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

4th Sep 2019 09:47 AM

ADVERTISEMENT

விளைபொருள்களைப் பாதுகாக்க ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள குளிர்பதனக் கிடங்குகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது; -
 நாமகிரிப்பேட்டை, பரமத்திவேலூர், திருச்செங்கோடு ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் தங்களது விளைபொருள்களைச் சேமிக்க, தலா 25 டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்குகள் பயன்பாட்டில் உள்ளன.
 விவசாயிகள் தங்களது பண்ணைகளில் அதிகம் உற்பத்தியாகும், காய்கறிகள், பழங்கள், உலர் பழங்கள், பயறு வகைகள், மஞ்சள், புளி போன்ற விளைபொருள்களை குறைந்தக் கட்டணத்தில் இருப்பு வைத்துக் கொள்ளலாம். குளிர்பதனக் கிடங்குகளில் சேமிக்க, மாதம் ஒன்றுக்கு பயறு, புளி ஆகியவற்றுக்கு, டன் ஒன்றுக்கு ரூ.200, மஞ்சள் ரூ.400, இதர பொருள்களுக்கு ரூ.500, காய்கறிகள், பழங்களுக்கு, மூன்று நாள்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.1.50, ஒரு டன் வாழைப்பழங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.150 சேமிப்புக் கட்டணமாக செலுத்த வேண்டும். மொத்தமாக குத்தகைக்கு எடுத்தால் ரூ.4,300, மின் கட்டணத்தைச் சேர்த்து செலுத்த வேண்டும். இந்த மூன்று குளிர்பதனக் கிடங்குகளிலும், விவசாயிகள் தங்களது விளைபொருள்களை சேமித்து வைத்து நல்லவிலை கிடைக்கும்போது விற்பனை செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT