நாமக்கல்

காவிரி நதியைப் பாதுகாக்க விழிப்புணர்வு

4th Sep 2019 09:24 AM

ADVERTISEMENT

ஈஷா யோகா மையமும், ரோட்டரி சங்கமும் இணைந்து, ராசிபுரம் நகரில் காவிரி கூக்குரல் என்ற முழக்கத்துடன் மரம் வளர்ப்பு, நீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தின.
 ஈஷா யோகா மையம் சார்பில் "நதிகளை மீட்போம்- பாரதம் காப்போம்' என்ற முழக்கத்துடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு காவிரி கூக்குரல் என்ற முழக்கத்துடன், நதிநீரைக் காக்கவும், மழை வளம் பெருகவும், காவிரி கரையோரம் மரக்கன்றுகள் நடவதற்கு ஈஷா மையம் முடிவு செய்துள்ளது.
 இதையடுத்து, செப்டம்பர் 3 முதல் 15-ஆம் தேதி வரை ஈஷா மையத்தின் சத்குரு ஜக்கி வாசுதேவ், கர்நாடகம், தமிழகம் ஆகிய 2 மாநிலங்களில் இரு சக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
 இதன்படி, கர்நாடகத்தில் குடகு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றபடி செப்டம்பர் 3-ல் பிரசாரம் தொடங்கியுள்ளார். இந்தப் பிரசாரம் செப்டம்பர் 15-இல் நிறைவடைகிறது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
 இதனையடுத்து ராசிபுரம் கவரைத்தெருவில் விழிப்புணர்வுத் தட்டிகள் ஏந்தியபடி, பொதுமக்களும், மாணவர்களும் நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்வில் ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.திருமூர்த்தி, முன்னாள் தலைவர்கள் கே.கே.வி.கிருஷ்ணமூர்த்தி, கே.சிட்டி, எஸ்.பாலாஜி, கே.குணசேகர், என்.சுரேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT