நாமக்கல்

ஊட்டச்சத்து வார விழா

4th Sep 2019 09:47 AM

ADVERTISEMENT

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியின் உணவுக் கட்டுப்பாட்டியல் துறை சார்பில் ஊட்டச்சத்து வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இதையொட்டி ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவது தொடர்பான விழிப்புணர்வுக்காக நடைபெற்ற அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள், நுண்ணூட்டச் சத்து உணவுகள் குறித்த கண்காட்சிக்கு கல்லூரி முதல்வர் கே.சுகுணா தலைமை வகித்தார். துறைத் தலைவர் ஆர்.சுஜாதா வரவேற்றார்.
 நிகழ்ச்சியில் புரதம், இருப்பு, சுண்ணாம்புச் சத்து, கால்சியம் உள்ளிட்ட வகையான உணவுகள், காய்கறிகள், பழங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில், 90 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT