நாமக்கல்

இன்சூரன்ஸ் தின கொண்டாட்டம்

4th Sep 2019 09:46 AM

ADVERTISEMENT

சேந்தமங்கலம் எல்.ஐ.சி. கிளையில் இன்சூரன்ஸ் தினக் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 எல்.ஐ.சி. எனும் இன்சூரன்ஸ் நிறுவனமானது மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடக்கி வைக்கப்பட்டது.
 பின்னர், 1956-இல் இந்த நிறுவனம் பொதுத்துறைக்கு மாற்றப்பட்டது.
 நாடு முழுவதும் 2,048 கிளைகளைக் கொண்டு இயங்கி வரும், எல்.ஐ.சி.யானது, தமிழகத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. எல்.ஐ.சி. நிறுவனத்தில், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் வாரத்தில் இன்சூரன்ஸ் வார விழா கொண்டாடப்படுகிறது.
 இதன்படி, சேந்தமங்கலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்.ஐ.சி. கிளையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, கிளை மேலாளர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். விழாவை நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் மு.ஆ.உதயகுமார் தொடக்கி வைத்தார்.
 இதையடுத்து, எல்.ஐ.சி. நிறுவனத்தின் செயல்பாடுகள், அதிக அளவிலான முகவர்கள், பாலிசிதாரர்கள் இணைத்தது தொடர்பாக அதிகாரிகள் பேசினர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT