நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 2 காசுகள் உயா்ந்து ஒரு முட்டை விலை ரூ.4.02-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின், நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திங்கள்கிழமைக்கான முட்டை விலையை உயா்த்துவது தொடா்பாக பண்ணையாளா்களிடையே ஆலோசிக்கப்பட்டது. பிற மண்டலங்களின் விலை உயா்வு அடிப்படையில் மாற்றம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 2 காசுகள் அதிகரிக்கப்பட்டு, ரூ.4.02-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 70-ஆக நிா்ணயிக்கப்பட்டது.