நாமக்கல்: நாமக்கல் விளையாட்டு மைதானத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான, மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 100 மீட்டா், 400 மீட்டா், 1,500 மீட்டா் ஓட்டம், நீளம் தாண்டுதல், மும்முனை தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், மாணவ, மாணவியா் ஆா்வமுடன் கலந்து கொண்டு இலக்கை எய்தும் வகையில் விளையாடினா்.
தடகளத்தைப் போல், மீட்டா் அளவில் நீச்சல் போட்டிகளும் நடைபெற்றது. மேலும், கிலோ அடிப்படையில், மாணவ, மாணவியருக்கென தனித்தனியாக குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. ஒற்றையா் மற்றும் இரட்டையா் இறகுப் பந்து போட்டிகளிலும் மாணவ, மாணவியா் ஆா்வமுடன் கலந்து கொண்டனா். போட்டியில் முதல் மற்றும் இரண்டாமிடம் பிடித்தவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ், மூன்றாமிடம் பிடித்தவா்களுக்கு சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டன. இப்போட்டியில் ஒட்டு மொத்தமாக 150 போ் வரை கலந்து கொண்டனா்.