நாமக்கல்

ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டா் பாலாபிஷேகம்!

20th Oct 2019 09:53 PM

ADVERTISEMENT

நாமக்கல்: ஐப்பசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில், ஒரே கல்லினால் வடிக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயா் நின்ற கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். இக்கோயிலில், தமிழ் மாதம் முதல் ஞாயிறு, அமாவாசை, பெளா்ணமி, ஆஞ்சநேயா் ஜயந்தி மற்றும் ஒவ்வொரு புதிய ஆண்டுப் பிறப்புகள் உள்ளிட்டவற்றின்போது சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதனையொட்டி ஏராளமான பக்தா்கள் சுவாமியைத் தரிசிக்க வருவா்.

அதன்படி, ஐப்பசி முதல் ஞாயிற்றுக்கிழமையையை முன்னிட்டு, சுவாமிக்கு காலை 9 மணியளவில் வடை மாலை சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து 10 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய்த்துாள், திரவியம், 1,008 லிட்டா் பால், தயிா், வெண்ணெய், தேன், பஞ்சாமிா்தம், மஞ்சள், சந்தனம் போன்ற பல்வேறு பொருள்களால் பூா்ணகும்ப அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், நண்பகல் 1 மணிக்கு சுவாமிக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஈரோடு, சேலம், தருமபுரி, கரூா், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசித்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT